திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காரைக்கால்,

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பிரமோற்சவ விழா

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்த வகையில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடைபெற்றது.

தேரோட்டம்

சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக கோவிலில் இருந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். மகா தீப தூபம் காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின் தேரோட்டம் தொடங்கியது.

இதையொட்டி காரைக்கால், புதுச்சேரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். தேரை பக்தி கோஷத்துடன் பக்தர்கள் இழுத்தனர். விழாவில், சபாநாயகர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, சிவா எம்.எல்.ஏ., துணை மாவட்ட கலெக்டர் ஆதர்ஷ், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story