திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
அரியாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலின் தீமிதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
வருகிற 30-ந் தேதி இரவு பூங்கரகம் அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும், அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி மாலை 5 மணிக்கு திரவுபதி அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் 3-ந் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. மறுநாள் காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவமும், இரவு 8 மணி அளவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
Related Tags :
Next Story