திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
பாகூர் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்க உள்ளது.
பாகூர்
பாகூர் அடுத்த குருவிநத்தம் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி நேற்று திரவுபதி-அர்ச்சுனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்..
Related Tags :
Next Story