தேர்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
காரைக்கால் சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால்
காரைக்கால் சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சனீஸ்வரர் கோவில்
காரைக்கால் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை மாலையில் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது.
விழாவில் வருகிற 23-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும், 24-ந் தேதி செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தேர் திருவிழா
விழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 5 தேர்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தேரை சுற்றி அமைக்கப்படும் செட், மேற்கூரை மற்றும் ஹைடிராலிக் பிரேக் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.