சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே ரவுடி தம்பி கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
வானூர்
ரவுடி தம்பி கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
வெட்டிக் கொலை
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மகன் விமல்ராஜ் (வயது 27). இவர் பொம்மையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக வேலைபார்த்து வந்தார்.
கடந்த 29-ந்தேதி இவர், ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மர்மகும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் 6 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேர் வானூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
பணியிடை நீக்கம்
ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ரவுடி வினோத்தின் தம்பி விமல்ராஜை எதிர் கோஷ்டியினர் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இதனை முன்கூட்டியே தெரிந்தும் தடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக கோட்டக்குப்பம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷஷாங்க் சாய் உத்தரவிட்டுள்ளார்.