கூரை வீடு எரிந்து நாசம்


கூரை வீடு எரிந்து நாசம்
x

காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் கூரை வீடு எறிந்து நாசமானது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நெடுங்காடு கூழ் குடித்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேசன். இன்று பகல் இவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. காரைக்கால் தீயணைப்பு நிலைய அதிகாரி அசோக் குமார் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீயில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கருகியது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கார்த்திகேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story