ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை


ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
x

கோரிமேடு பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் சமீப காலமாக ரவுடிகளுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்கி உள்ளது. ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலீசார் அடிக்கடி அவர்களது வீடுகளின் சோதனை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று புதுச்சேரி கோரிமேடு பகுதியில் ரவுடிகள் வீடுகளில் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், வம்சிதர ரெட்டி மற்றும் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது தடைவிதிக்கப்பட்ட ரவுடிகள் யாரும் ஊருக்குள் வந்துள்ளார்களா? என சோதனை நடத்தினா். மேலும் தடையை மீறி ஊருக்குள் நுழைந்தது தெரியவந்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதேபோல் கோரிமேடு எல்லைப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் யாரும் தஞ்சம் புகுந்துள்ளார்களா? எனவும் விசாரணை நடத்தினா். தமிழகத்தை சேர்ந்த ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story