ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
தடை உத்தரவை மீறி ஊருக்குள் புகுந்துள்ளார்களா? என ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி
தடை உத்தரவை மீறி ஊருக்குள் புகுந்துள்ளார்களா? என ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
ஊருக்குள் நுழைய தடை
புதுவையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைக்கு பங்கம் வராமல் இருக்கு ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில ரவுடிகள் ஊருக்குள் நுழைய மாவட்ட கலெக்டரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை மீறி ரவுடிகள் சிலர் ஊருக்குள் வருவதாக புகார்கள் வந்துள்ளது. இதை தடுக்கும் வகையில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
போலீசார் திடீர் சோதனை
அந்த வகையில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் இன்று இரவு சாமிபிள்ளை தோட்டம், கருவடிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ரவுடிகள் யாரும் வந்துள்ளார்களா? என ஒவ்வொரு ரவுடிகள் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.
மேலும் ரவுடிகளின் குடும்பத்தினரிடம், தடை விதிக்கப்பட்டவர்கள் யாரும் ஊருக்குள் வந்தது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.