கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது


கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
x

மாகியில் கோவில் உண்டியலை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவை பிராந்தியமான மாகியில் உள்ள கோவில் 3 உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தையும், அங்கு பொருத்தப்படடிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் மின்சாதன பொருட்களையும் திருடி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாகி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவில் உண்டியல் மற்றும் கேமரா, மின்சாதனைங்களை திருடியது கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அர்ஷாத் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அர்ஷாத் கேரளாவில் 10 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story