கைதானவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை


கைதானவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
x

புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 45). இவரது மனைவி உஷா என்கிற உண்ணாமலை (வயது ). இவர்கள் ஏலச்சீட்டு நடத்தி 200-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவானார்கள்.

இது குறித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்சியில் பதுங்கி இருந்த பாலசுப்ரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணைக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பேரில் பாலசுப்ரமணியனை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். நேற்றுடன் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) பாலசுப்ரமணியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள உஷாவை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.


Next Story