விடுதியில் தங்குபவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும்


விடுதியில் தங்குபவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும்
x

விடுதியில் தங்குபவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.

அரியாங்குப்பம்

புதுவை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் தெற்கு பகுதிக்குட்பட்ட போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தங்கும் விடுதி உரிமையாளர்கள் - போலீஸ் நல்லுறவுக் கூட்டம் அரியாங்குப்பத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கணேஷ், இனியன் மற்றும் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் பேசுகையில், 'தங்களது விடுதியில் தங்கும் நபர்களின் ஆதார் கார்டில் உள்ள முகவரியை முழுமையாக சேகரிக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் விடுதியில் தங்கி இருந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விடுதியில் பணம் வைத்து சூதாடுவதை அனுமதிக்கக்கூடாது, சூதாட்டம் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசருக்கு கண்ணும் காதுமாக இருப்பது பொதுமக்களே, எனவே எதையும் மறைக்க முடியாது, அவர்கள் மூலம் பல தகவல்கள் தெரியவரும்' என்றார்.



Next Story