புதுச்சேரிக்கு ரூ.576 கோடியை மத்திய அரசு வழங்கியது
ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையாக புதுச்சேரிக்கு ரூ.576 கோடியை மத்திய அரசு வழங்கியது.
புதுச்சேரி
ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையாக புதுச்சேரிக்கு ரூ.576 கோடியை மத்திய அரசு வழங்கியது.
மாநிலங்களுக்கு இழப்பீடு
நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த வரியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இழப்பீடு வழங்குவதற்காக சில பொருட்கள் மீது மத்திய அரசு செஸ் வரி வசூலிக்கிறது. அதன்மூலம் கிடைக்கும் தொகை ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதியத்தில் சேர்க்கப்படுகிறது. அதில் இருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
ரூ.576 கோடி வழங்கியது
இதற்கிடையே செஸ் வரி வசூலில் ஏற்பட்ட பற்றாக்குறையால் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பாக்கி வைத்தது. அதனை வழங்க வேண்டும் என்று அந்தந்த மாநிலங்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
இந்தநிலையில் மே 31-ந் தேதி வரை வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகையை மத்திய அரசு முழுமையாக விடுவித்தது. அதன்படி புதுச்சேரிக்கு ரூ.576 கோடி வழங்கியுள்ளது.