வீடு முன் நிறுத்தியிருந்த கார் திருட்டு


வீடு முன் நிறுத்தியிருந்த கார் திருட்டு
x

திருக்கனூர் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே சோம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவர் சம்பவத்தன்று இரவு தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தார். ஆனால் காரை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ காரை நள்ளிரவில் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து திருக்கனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story