இடிந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைப்பு
அம்பகரத்தூர் பிரதான சாலையில் இடிந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது,
காரைக்கால்
காரைக்கால் முதல் அம்பகரத்தூர் வரை செல்லும் பிரதான சாலையின் குறுக்கே, பல்வேறு பெரிய பாலம் மற்றும் தரை பாலங்கள் உள்ளது. அவற்றில் அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே பிரதான சாலையில் இருந்த தரைப்பாலம் திடீரென உள்வாங்கி இடிந்தது. அதன்காரணமாக, காரைக்கால் முதல் அம்பகரத்தூர், பேரளம், கும்பகோணம் இடையே போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் இடிந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைத்தனர். தற்போது வழக்கம்போல வாகன போக்கு வரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story