மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
காரைக்காலில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் வள்ளலார் நகர், தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார்குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்று கொண்டிருந்த காரைக்கால் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷேக் பஹத் (வயது20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story