தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுச்சேரி

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் புதுவை செவிலிய கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். ஊர்வலம் கடற்கரை சாலை காந்தி திடலில் நிறைவடைந்தது.


Next Story