கூலி தொழிலாளி திடீர் சாவு


கூலி தொழிலாளி திடீர் சாவு
x

முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தான் பராமரித்து வந்த வீட்டை பார்வையிட சென்ற போது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மூலக்குளம்

மூலக்குளம் முதலியார் பேட்டை ராமலிங்கம் வீதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 59). கூலி தொழிலாளி. இவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது நண்பர் கோவிந்தராஜுக்கு சொந்தமான பூமியான் பேட்டையில் உள்ள வீட்டை பராமரித்து வந்தார். இன்று காலை முனியப்பன் அந்த வீட்டை பார்வையிட சென்றார். அப்போது அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story