என்ஜினீயர் திடீர் சாவு


என்ஜினீயர் திடீர் சாவு
x

சின்னகாலாப்பட்டு நாகவள்ளியம்மன் கோவிலை சேர்ந்த என்ஜினீயர் திடீர் உயிரழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலாப்பட்டு

சின்னகாலாப்பட்டு நாகவள்ளியம்மன் கோவில் இ.சி.ஆர். மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது61). எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி அம்பிகாபதி. இவரது மகன் பிரதீப் (33). என்ஜினீயரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் தந்தைக்கு உதவியாக எலக்ட்ரிக் கடையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென தோள்பட்டை வலித்தது. உடனே அவர் அருகில் உள்ள காலாப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவருக்கு வலி அதிகமானது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரதீப் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story