கஞ்சா விற்ற ஸ்டூடியோ உரிமையாளர் கைது


கஞ்சா விற்ற ஸ்டூடியோ உரிமையாளர் கைது
x

‘டிப்டாப்’ உடையணிந்து கஞ்சா விற்ற ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்

'டிப்டாப்' உடையணிந்து கஞ்சா விற்ற ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவரைபோல..

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எல்லைபிள்ளைச்சாவடி விவேகானந்தா நகர் 4-வது குறுக்கு தெருவில் வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவரை போல் டிப்டாப் உடையணிந்து தோளில் பையை சுமந்தபடி நின்று கொண்டு இருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். உடனே போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

ஸ்டூடியோ உரிமையாளர் கைது

அப்போது அவர் கடலூர் மாவட்டம் வடலூர் முத்துக்கிருஷ்ணன் வீதியை சேர்ந்த இசைதாசன் (வயது 31) என்பதும், பண்ருட்டியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருவதும், அதில் போதுமான வருமானம் கிடைக்காததால் விரைவில் பணக்காரனாகும் நோக்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அதனை புதுவை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story