மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி


மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
x

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியை கடற்கரை சாலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் எலைட் விளையாட்டு பயிற்சி மையம், புளூ ஸ்டார் கூடைப்பந்து கழகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், 3 பேர் விளையாடும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., புதுச்சேரி கூடைப்பந்து சங்க தலைவர் பிரான்சிஸ் தாமஸ் ஜனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகள் ஆண், பெண்களுக்கு என 5 பிரிவுகளாக நடக்கிறது. இதில் 66 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 8 மணியளவில் நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியின் தாளாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.


Next Story