விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சிறப்பு ஏற்பாடு


விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சிறப்பு ஏற்பாடு
x

புதுவையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரி

புதுவையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விநாயகர் சிலை

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் வரும் 22 ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.

இந்த ஊர்வலம் காமராஜர் சாலையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை சாலையில் பழைய கோர்ட்டு அருகே முடிவடைகிறது. அங்கு இந்த சிலைகள் கடலில் கரைக்கப்பட உள்ளது.

சாய்தளம்

இதற்காக புதுச்சேரி நகராட்சி சார்பில் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணலை தோண்டி அங்கு சாய்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக அங்குள்ள பாறாங்கற்களில் மண்கொட்டப்படுகிறது.

ஊர்வலமாக கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகள் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு கிரேன் மூலம் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


Next Story