திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் ஆலோசனை


திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் ஆலோசனை
x
தினத்தந்தி 11 Oct 2023 5:12 PM (Updated: 11 Oct 2023 5:15 PM)
t-max-icont-min-icon

மணவெளி தொகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி

மணவெளி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள், கழிவுநீர் வாய்க்கால் பணிகள், குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் இலவசமனைப்பட்டா வழங்குவது தொடர்பாக பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான செல்வம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சட்டப்பேரவை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலைக்கழக மேலாண் இயக்குனர் சிவகுமார், பொது மேலாளர் ஆறுமுகம் செயற்பொறியாளர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் பக்தவச்சலம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், நல அதிகாரி மோகனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது மணவெளி தொகுதியில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும். டி.என்.பாளையம் பகுதியில் அட்டவணை இன மக்களுக்கு விரைந்து இலவச மனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அபிஷேகப்பாக்கம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் உருவச்சிலையை வருகிற 18-ந்தேதிக்குள் திறக்க வேண்டும் எனவும் சபாநாயகர் செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story