அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்


அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
x

புதுவை அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகளை ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி

புதுவை அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகளை 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

ஸ்மார்ட் வகுப்பறைகள்

புதுவை அரசுப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகள் தவிர அனைத்து வகுப்புகளிலும் இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அடுத்தகட்டமாக அரசு பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளையும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக மாற்றிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் நிறுவனத்தின் இயக்குனர்களான ஆஷிஷ், ஜான் கெல்வின் ஆகியோர் இன்று கல்வித்துறை கருத்தரங்க அறையில் அமைச்சர் நமச்சிவாயத்துடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷிணியும் கலந்துகொண்டார்.

அப்போது அனைத்து பள்ளிகளையும் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றி மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாதிரி கற்றல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

புத்தாக்க பயிற்சி

புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மதிய உணவு சமைப்பவர் மற்றும் ரொட்டி-பால் ஊழியர்களுக்கு புத்தாக்க நிகழ்ச்சி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டினார். மேலும் ரொட்டிப்பால் ஊழியர்களின் சம்பளத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கல்வித்துறை துணை இயக்குனர்கள் கொஞ்சுமொழி குமரன், சிவராமரெட்டி, முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story