தேரின் உறுதி தன்மை குறித்து சிவா எம்.எல்.ஏ. ஆய்வு
வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் தேரின் உறுதி தன்மை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தேரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுச்சேரி
வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் பிரமோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 1-ந்தேதி தேர் திருவிழா நடக்கிறது.
இதையொட்டி தேரின் உறுதி தன்மை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தேரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவிலில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு 200 நாளை எட்டியதை தொடர்ந்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன், தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ராமசாமி, செல்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story