248 வழக்குகளுக்கு தீர்வு


248 வழக்குகளுக்கு தீர்வு
x

காரைக்கால் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 248 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அல்லி தலைமையின் கீழ் ஒரு அமர்வும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராஜசேகரன் தலைமையின் கீழ் ஒரு அமர்வும், சார்பு நீதிபதி பழனி தலைமையின் கீழ் ஒர் அமர்வும், குற்றவியல் நடுவர் வரதராஜன் தலைமையின் கீழ் ஒரு அமர்வும் செயல்பட்டது. இதில் காரைக்கால் கோர்ட்டில் நிலுவையில் இருந்த, சமாதானம் ஆகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து, குடும்ப நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட 1,580 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முடிவில் 248 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.60 லட்சத்து 15 ஆயிரத்து 81 வசூலிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல் சங்க தலைவர் முத்துக்குமரன், செயலாளர் திருமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story