50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
காரைக்காலில் வணிக நிறுவனங்களில் நடத்த சோதனையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அதிகாாிகள் பறிமுதல் செய்தனா்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவின் பேரில் தாசில்தாரும், நகராட்சி வருவாய் அதிகாரியுமான செல்லமுத்து தலைமையில், நகராட்சி குழுவினர் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வணிக நிறுவனங்களில் இருந்து சுமார் 50 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் விற்றால் அபராதம் விதிப்பதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story