பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்


பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2023 5:13 PM GMT (Updated: 6 Sep 2023 6:34 PM GMT)

காரைக்காலில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

ஆதிதிராவிடர் நலத்துறை உதவி இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, அரசு அதிகாரிகள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் கல்வி உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அதிகாரிகள், உதவித்தொகை பெறுவதற்கு தேவையான சான்றிதழை வருவாய்த்துறை வழங்கும் என தெரிவித்தார்கள். அவசியம் ஏற்பட்டால் சிறப்பு முகாம் நடத்துவது என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றை புதிதாக வாங்க தேவையில்லை என்றும், அதன் பழைய நகல்களை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள். அக்டோபர் 31-ந் தேதிக்குள் உதவித்தொகைக்காக அந்தந்த பள்ளிகள் சார்பாக ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப ஆவன செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.


Next Story