தீயணைப்புத்துறையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு
தென்னிந்தியாவில் முதன்முதலாக புதுவையில் பெண்களுக்கு தீயணைப்புத்துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாய்.சரவணன்குமார் கூறினார்.
புதுச்சேரி
தென்னிந்தியாவில் முதன்முதலாக புதுவையில் பெண்களுக்கு தீயணைப்புத்துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாய்.சரவணன்குமார் கூறினார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு இடஒதுக்கீடு
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த 20 வருடங்களாக தீயணைப்புத்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் தற்போது 63 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக புதுச்சேரியில் பெண்களுக்கு தீயணைப்புத்துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும். வேறு மாநிலங்களிலும் இதன் மூலம் பெண்களுக்கு தீயணைப்புத்துறையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ரேஷன்கார்டுகள் ரத்து
புதுவை மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 75 நாட்கள் வரை வேலை கொடுத்துள்ளோம். விரைவில் 100 நாளை எட்டுவோம்.
தகுதியுள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏனாமில் தகுதியில்லாத 2 ஆயிரம் ரேஷன்கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினராகவும் அங்கீகரித்துள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் சாய்.சரவணன்குமார் கூறினார்.