சிலைக்கு, ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை


சிலைக்கு, ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை
x

பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி

பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாரதியார் நினைவு தினம்

புதுச்சேரி அரசு சார்பில் புரட்சி கவிஞர் பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கவர்னர் மாளிகை அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

பா.ஜ.க.

இதுபோல பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பாரதியார் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Next Story