அம்பேத்கர் சிலைக்கு, ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ரங்கசாமி மாலை
அம்பேத்கரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு சென்றனர். அங்குள்ள அம்பேத்கரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பா.ஜ.க.-தி.மு.க.
பா.ஜ.க.வினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, நிர்வாகிகள் செல்வம், தங்க.விக்ரமன், தமிழ்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க.வினர் மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சண்.குமாரவேல், மூர்த்தி, லோகையன், ஜே.வி.எஸ்.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், சக்திவேல், கார்த்திகேயன், வேலவன், அமுதாகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ்-அதி.மு.க.
காங்கிரசார் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன் ,அனந்தராமன், நிர்வாகிகள் தனுசு, கருணாநிதி, இளையராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க.வினர் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ராஜாராமன், இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணை செயலாளர்கள் கருணாநிதி, கணேசன், மூர்த்தி, நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி, குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கம்யூனிஸ்டு-பா.ம.க.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் சலீம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் சுப்பையா, மாநிலக்குழு உறுப்பினர்கள் கீதநாதன், முருகன், ரவிச்சந்திரன், ஹேமலதா, எழிலன் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முருகன், சீனுவாசன், பிரபுராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தை கட்சியினர் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் படத்துடன் சுதேசி மில் அருகே இருந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை தாங்கினார். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி வழியாக மிஷன் வீதி அருகே வந்தபோது மிஷன் வீதி வழியாக செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதையும் மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேரு வீதி வழியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சி பொறுப்பாளர்கள் சிபிசந்தர், தலையாரி, அமைப்பு செயலாளர் அமுதவன், பொருளாளர் தமிழ்மாறன், தொண்டரணி முதன்மை செயலாளர் பொதினிவளவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பழங்குடி கூட்டமைப்பு
பழங்குடி மக்கள் கூட்டமைப்பினர் மாநில தலைவர் ராம்குமார் தலைமையிலும், மாணவர் கூட்டமைப்பினர் சாமிநாதன் தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் பல்வேறு சமூக அமைப்பினர், மாணவர்கள் அமைப்பினரும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர்.
பீம்சேனாவினர் நிறுவனர் மூர்த்தி தலைமையிலும், ஜெய்பீம் இளைஞர் முன்னணியினர் அமைப்பாளர் செந்தில் தலைமையிலும், ஆதிதிராவிடர் விடுதலை இயக்கத்தினர் நிறுவனர் வரத.காளிதாஸ் தலைமையிலும், புதுவை மாநில அருந்ததியர் மக்கள் சங்கத்தினர் பொதுச்செயலாளர் தவமணி தலைமையிலும், டாக்டர் அம்பேத்கர் மறுமலர்ச்சி கழகத்தினர் தலைவர் ராஜசேகர் தலைமையிலும், புதுவை மாநில அம்பேத்கர் இலக்கிய பேரவையினர் தலைவர் அன்பு தலைமையிலும், பாரத ரத்னா டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் சமூக சேவை இயக்கத்தினர் தலைவர் மதிவாணர் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பாரதியார் பல்கலைக்கூடம்
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் "மாணவர்களின் பாதை மாபெரும் தலைவர் அம்பேத்கர்" என்ற பொருளில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை பாரதியார் பல்கலை கூட மாணவர்கள் கொண்டாடினர். விழாவில் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி, புதுச்சேரி ஜிப்மர் இருதயப் பிரிவு மருத்துவத்துறையை சார்ந்த எழுத்தாளர் இளவரசி சங்கர் மற்றும் பாரதியார் பல்கலைக்கூடத்தின் நுண்கலைத் துறை, இசைத்துறை, நாட்டியத்துறை தலைவர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பாரதியார் பல்கலைக்கூட மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார்.