பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்
திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் நடைபெற்றது.
வானூர்
திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ராமநவமி உற்சவம் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி உற்சவம் இன்று நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், கூடுதல் தலைவர் யுவராஜன், செயலாளர்கள் நரசிம்மன், பழனியப்பன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story