வெள்ளக்காடாக மாறிய புதுச்சேரி


வெள்ளக்காடாக மாறிய புதுச்சேரி
x

இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் புதுச்சேரி வெள்ளக்காடாக மாறியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

புதுச்சேரி

இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் புதுச்சேரி வெள்ளக்காடாக மாறியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இடி, மின்னலுடன் மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் புதுவையில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது.

வீடுகளில் மழைநீர் புகுந்தது

இதற்கிடையே இரவு 9 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இடைவிடாது வெளுத்து வாங்கிய மழையால் புதுவை வெள்ளக்காடாக மாறியது. ரெயின்போ நகர், பூமியான்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பலத்த மழை காரணமாக புஸ்சி வீதி, பாரதி வீதி, லப்போர்த் வீதி, சின்ன சுப்புராயபிள்ளை வீதி, சின்னவாய்க்கால் வீதி, வழுதாவூர் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சந்திப்புகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.

புதுச்சேரி 100 அடி சாலை ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் அரசு ஆஸ்பத்திரி அருகே, செஞ்சி சாலை பகுதியில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.


Next Story