மண்டல அணிக்கு புதுச்சேரி வீராங்கனை தேர்வு


மண்டல அளவிலான போட்டியில் விளையாட புதுச்சேரி அணியை சேர்ந்த வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சீனியர் பெண்களுக்கான மண்டல அளவிலான 20 ஓவர் போட்டிகளை லக்னோவில் வருகிற 8-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை நடத்துகிறது.

இந்த போட்டிகளின் அடிப்படையில் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த மண்டல அளவிலான போட்டியில் விளையாட புதுச்சேரி அணியை சேர்ந்த வீராஙக்னை யுவஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் கோவாவில் நடைபெற உள்ள சேலஞ்சர்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு மற்றொரு வீராங்கனை அம்ருதா சரண் இந்திய 'சி' அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு கிரிக்கெட் அசோசியேசன் ஆப் புதுச்சேரி (சி.ஏ.பி.) கவுரவ தலைவர் சந்திரன் வாழ்த்து தெரிவித்தார். சி.ஏ.பி.யின் தொடர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story