போலீசாருக்கு மனநல பயிற்சி
புதுவையில் தற்கொலை எண்ணங்களை தடுக்க போலீசாருக்கு மனநல பயிற்சி நடந்தது.
புதுச்சேரி
புதுவை அரசு மனநலத்துறை மற்றும் தேசிய மனநல திட்டத்தின் சார்பில் போலீசாருக்கான மனநல பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில் மனநல ஆலோசகர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போதை தடுப்பு, மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுவது, தற்கொலை எண்ணங்களை கண்டறிந்து எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சியில் காவலர் பயிற்சி பள்ளி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பங்கஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் பயிற்சி போலீசார் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story