காமாட்சியம்மன் கோவில் நிலத்தை ஒப்படைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
புதுவையில் அபகரிக்கப்பட்ட காமாட்சியம்மன் கோவில் நிலத்தை ஒப்படைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி
போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கப்பட்ட காமாட்சியம்மன் கோவில் நிலத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கக்கோரி தெய்வத்தமிழ் பேரவை சார்பில் இன்று காலை பாரதிவீதி, செட்டித்தெரு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ராசாராமன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் அசோக்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முருகன், அருணபாரதி, சிவக்குமார், ரமேஷ், வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை ஏற்று அபகரிக்கப்பட்ட காமாட்சியம்மன் கோவில் நிலங்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story