வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதல் 41 அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் மதகடி யூத் கிரிக்கெட் அணி முதலிடம் பிடித்தது.
பியூட்சர் விஷன் அணி 2-வது இடத்தையும், திருவேட்டக்குடி அணி 3-வது இடத்தையும், ரெய்சிங் ஸ்டார் அணி 4-ம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணியினருக்கு துணை மாவட்ட கலெக்டர் மற்றும் வாக்குப்பதிவு அதிகாரியுமான ஆதர்ஷ், பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு அதிகாரி சுபாஷ் மற்றும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை தேர்தல் துறை அலுவலக கண்காணிப்பாளர் பக்கிரிசாமி செய்திருந்தார்.
Related Tags :
Next Story