மின்துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும்
புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி
தமிழ்நாடு மற்றும் புதுவை சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து சம்மேளன 4-வது மாநில குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. தமிழ் மாநில தலைவர் ஆறுமுக நயினார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பார்த்தசாரதி நிர்வாகிகள் திருமலை, அன்பு, மதிவாணன், ரவிச்சந்திரன், மணிபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை அமைக்கவேண்டும்.
புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பொது வினியோக திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். புதுவையில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை திறக்க வேண்டும். சுங்க கட்டண கெள்ளையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story