ஜனாதிபதி திரவுபதி முர்மு காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்


ஜனாதிபதி திரவுபதி முர்மு காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்
x

அரியாங்குப்பம், வில்லியனூர், காரைக்காலில் பாலின வள மையங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

புதுச்சேரி

அரியாங்குப்பம், வில்லியனூர், காரைக்காலில் பாலின வள மையங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

பாலின வள மையங்கள்

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் வழிகாட்டுதலின்படி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது இத்திட்டத்தின் ஒரு அங்கமான பாலின சமம் மற்றும் சமத்துவம் சார்ந்த தீவிர பிரசாரங்களை ஒரு மாதம் (வருகிற 25-ந்தேதி முதல் டிசம்பர் 23-ந்தேதிவரை) நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் முன்னேற்பாடாக அனைத்து வட்டாரங்களில் உள்ள அரசு அலுவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி தொடக்கம்

இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி அண்ணாமலை ஓட்டலில் நேற்று நடந்தது. பயிற்சியை அமைச்சர் சாய் சரவணன்குமார் தொடங்கிவைத்தார். தொடர்ந்து தேசிய மற்றும் மாநில வள பயிற்றுனர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் சாய் சரவணன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி பெண்களின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இப்போது பாலின சமத்துவம் குறித்து 4 வாரம் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். குழந்தை திருமணத்தை தடுத்தல், பொருளாதாரத்தை பெருக்குதல், உரிமையை பெற்றுத்தருதல், சட்ட பாதுகாப்பு ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

புகார் கமிட்டி

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள அரியாங்குப்பம், வில்லியனூர், காரைக்கால் ஆகிய 3 வட்டங்களில் பாலின வள மையங்களை வருகிற 25-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.

10 பேருக்கு மேல் வேலைசெய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் புகார் கமிட்டி இருக்கவேண்டும். புகார் கமிட்டி அமைப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சாய் சரவணன்குமார் கூறினார்.


Next Story