மழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை


மழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x

காரைக்கால் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.

பலத்த மழை

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, சென்னை மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று இரவு வரை 24 மணி நேரமும் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. ஒரு சில நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

காரைக்காலை சேர்ந்த 11 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் மீனவர்கள் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் மழைநீர் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் அமைச்சர் சந்திரபிரியங்கா, மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீரால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது:- காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்கள் கண்டறியப்பட்டு, பொதுமக்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர் மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். அரசுத்துறை அதிகாரிகள் வாட்ஸ் அப் குழு அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story