வேலை வாய்ப்பு முகாம்


வேலை வாய்ப்பு முகாம்
x

தொழிலாளர் துறை அலுவலத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்த போது எடுத்த படம்.

தொழிலாளர் துறை சார்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 100 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பகம் சார்பில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதுவை, நெட்டப்பாக்கம், திருவண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முகாமில் 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரி வாலிபர்கள், இளம் பெண்கள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களை தனியார் நிறுவன அதிகாரிகள் சான்றிதழ்கள் சரிபார்த்து நேர்காணல் நடத்தினர். இதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.


Next Story