குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அரும்பார்த்தபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூலக்குளம்
அரும்பார்த்தபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு
புதுவை அரும்பார்த்தபுரம் தக்கக்குட்டை பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்துக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இது பற்றி அரசு அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதனை கண்டித்து இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அரும்பார்த்தபும் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் விழுப்புரம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.