நவீன கருவி மூலமாக அபராதம் விதிக்கும் திட்டம்


நவீன கருவி மூலமாக அபராதம் விதிக்கும் திட்டம்
x

சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு நவீன கருவி மூலமாக அபராதம் விதிக்கும் திட்டத்தை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த நகர பகுதிகளில் வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் விதமாக போக்குவரத்து போலீசாருக்கு லேசர் வேக அளவிடும் நவீன கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த கருவிகளை சோதனை செய்யும் விதமாக, புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் அருகே வேக அளவீடு கருவிகளை சோதனை செய்தனர். மேலும் அனைத்து வாகனங்களும் நகர பகுதிகளில் 30 கி.மீ. வேகத்திலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும், இதனை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் இந்த திட்டம் நேற்று முதல் காரைக்கால் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தினை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story