துணை ராணுவம் கொடி அணிவகுப்பு


துணை ராணுவம் கொடி அணிவகுப்பு
x

திருக்கனூா் கடைவீதியில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

திருக்கனூர்

புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. போராட்டத்தையொட்டி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் துணை ராணுவத்தினரும், திருக்கனூர் போலீசாரும் இணைந்து திருக்கனூர் கடைவீதியில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனித ராஜா ஆகியோரது தலைமையில் துணை ராணுவத்தினர், போலீசார் திருக்கனூர் கடைவீதி, வணிகர் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் வழியாக கே.ஆர்.பாளையம் கடைவீதி வரை சென்றனர்.


Next Story