காவிரி நீர் வராததால் கருகும் நெற்பயிர்கள்


காவிரி நீர் வராததால் கருகும் நெற்பயிர்கள்
x

காரைக்கால் கடைமடைக்கு காவிரியில் இருந்து போதுமான தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருகுகின்றன.

காரைக்கால்

காரைக்கால் கடைமடைக்கு காவிரியில் இருந்து போதுமான தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருகுகின்றன.

கானல் நீரானது

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்ட காவிரி நீரின் ஒரு சிறிய அளவிலான பகுதி, கடந்த ஜூலை மாதம், டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு வந்தது.

காரைக்காலுக்கு 7 டி.எம்.சி நீர் என்பது கானல் நீராக மாறிவிட்டது. ஜூலை மாதம் வந்த காவிரி நீர், காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தொடர்ந்து வரும் என நம்பி ஏராளமான விவசாயிகள், குறுவை நெல் நடவு செய்தனர். ஆனால், நீர்வரத்து அதற்கு மேல் வரவில்லை.

பயிர்கள் கருகின

புதுச்சேரி அரசின் நிதி பற்றாகுறையால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகி, சரி செய்யமுடியாமல், விவசாயிகள் குறுவையை காக்க வழியின்றி தவித்து வருகின்றனர். அத்துடன் இந்த ஆண்டு போதிய மழையும் பெய்யாமல் பொய்த்து விட்டது. போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருக தொடங்கி விட்டது. இதனால் 600 எக்டேர் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது.

தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடி கருகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனையடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து காரைக்கால் கடைமடை பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ் கூறுகையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story