ஆபரேஷன் உதவியாளர்,டிரைவர் பணிக்கான எழுத்துத்தேர்வு


ஆபரேஷன் உதவியாளர்,டிரைவர் பணிக்கான எழுத்துத்தேர்வு
x

சுகாதாரத்துறை ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் மற்றும் காவல்துறையில் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 47 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர்.

புதுச்சேரி

சுகாதாரத்துறை ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் மற்றும் காவல்துறையில் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 47 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர்.

ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுக்கு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியை சேர்ந்த மொத்தம் 485 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வு முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்தது. காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். அவர்கள் நுழைவுச்சீட்டுடன் அடையாள அட்டை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

47 சதவீதம் பேர் பங்கேற்பு

தேர்வர்கள் செல்போன், புளூ டூத் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை 127 ஆண்கள், 99 பெண்கள் என மொத்தம் 226 பேர் கலந்து கொண்டு எழுதினர். இது 46.60 சதவீதம் ஆகும்.

இதேபோல காவல்துறையில் டிரைவர் நிலை-3 பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வும் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடந்தது. இந்த தேர்வு எழுத மொத்தம் 73 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 68 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 5 பேர் மட்டும் தேர்வு எழுதவில்லை.

எழுத்துத் தேர்வுக்கான விடைகள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.


Next Story