சவப்பாடையுடன் நூதன போராட்டம்
கொம்பாக்கத்தில் மண் லாரிகளால் விபத்தை கண்டித்து சவப்பாடையுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரியை அடுத்த கொம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து வண்டல் மண் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கொம்பாக்கம்- வில்லியனூர் சாலையில் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற ஆறுமுகம் (வயது 72) என்பவர் பலியானார். இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் கொம்பாக்கம் மார்க்கெட் அருகே இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பிணம் போல உருவ பொம்மை ஒன்றை செய்து, அதனை சவப் பாடயைாக சாலையில் கிடத்தி, அருகில் பழம், ஊதுவத்தி வைத்து தப்பாட்டம் அடித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மண் லாரிகளால் ஏற்படும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.