மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி


மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி
x

போக்குவரத்து அலுவலக கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி

புதுச்சேரி

ஒடிசாவை சேர்ந்தவர் அண்ணன் ரூனா பைக் (21). இவர் கட்டுமான பணிக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுவைக்கு வந்தார். தேங்காய்திட்டு துறைமுகம் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் போக்குவரத்து அலுவலக கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு ரூனா பைக் மின்சார வயரை மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து ரூனா பைக் தூக்கி வீசப்பட்டார். அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரூனா பைக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story