8 மையங்களில் 'நீட்' தேர்வு


8 மையங்களில் நீட் தேர்வு
x

புதுச்சேரி

புதுவையில் 8 மையங்களில் மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

'நீட்' தேர்வு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடக்கிறது. இதற்கான நுழைவுச்சீட்டுகள் ஏற்கனவே இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 'நீட்' தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இதற்காக புதுச்சேரி காலாப்பட்டு ஸ்டடி சி.பி.எஸ்.சி. பள்ளி, வில்லியனூர் ஆச்சாரியா, தேங்காய்திட்டு ஆச்சாரியா, முத்தியால்பேட்டை வாசவி, ஊசுடு பாரத் வித்யாஷ்ரம், கொம்பாக்கம் செயின்ட் ஜோசப் குளூனி சி.பி.எஸ்.இ. பள்ளி, கோபாலன்கடை விவேகானந்தா பள்ளி, பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி ஆகிய 8 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

5,753 மாணவர்கள்

இங்கு 5,753 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் காலை 11.40 மணிக்குள் தேர்வு மையம் முன்பு வந்து விட வேண்டும். ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.


Related Tags :
Next Story