தேசிய மக்கள் நீதிமன்றம்
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடககறிது.
புதுச்சேரி
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுவை கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படுகிறது. அதாவது சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன்-மனைவி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக்கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
வழக்குகளை சமாதான முறையில் தீர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான அம்பிகா தெரிவித்துள்ளார்.