தேசிய பெண் குழந்தைகள் தின விழா

மரக்காணத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கலெக்டர் தலைமையில் நடந்தது,
மரக்காணம்
விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் தேசிய பெண் குழந்தைகள் தின விழா மரக்காணத்தில் நடைபெற்றது. விழாவை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருக்குறள் ஒப்புவித்த சிறுமியை பாராட்டி ஒன்றியக்குழு தலைவர் தயாளன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மாவட்ட கலெக்டர் மோகன் அந்த சிறுமியை தனது மடியில் அமர வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறுமிகளுக்கு பரிசு பொருட்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நீலாம்பாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராசன், திருவேங்கடம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.